ஆன்மாவுக்கும் உறவுக்கும் இடையிலான உண்மை
ஆன்மாவுக்கும் உறவுக்கும் இடையிலான உண்மை மனித வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளில் ஒன்று, ஆன்மாவுக்கு உறவு உண்டோ? பிறப்பு, பாசம், உறவு, பிரிவுஇவை அனைத்தும் நம் வாழ்வின் அங்கங்களாகத் தோன்றினாலும், ஆன்மீக பார்வையில் அவை நிலையற்றவை. உடல் என்பது ஆன்மா தங்கும் தற்காலிக இடம். உயிர் இருக்கும் வரைதான் உடலுக்குப் பெயர், புகழ், உறவு எல்லாம். உயிர் பிரிந்தவுடன் அந்த உடல் “பிணம்” அல்லது “சடலம்” என அழைக்கப்படுகிறது. ஆன்மா ஒரு சட்டையை மாற்றுவது போல உடல்களை மாற்றிக் கொள்கிறது. உறவுகள், பாசம், நட்பு அனைத்தின் அர்த்தமும் உயிர் உடலில் இருக்கின்ற வரையில் தான் நிலைக்கும். ஆன்மாவுக்கு தந்தை, தாய், மகன், பகைவர் என எதுவும் இல்லை. அது தூய்மையான பேரொளி. வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் வழிப்போக்கர்களைப் போல. பயணம் முடியும் வரை துணை வருவார்கள், இலக்கு வந்ததும் பிரிந்து விடுவார்கள். பிறப்பு, இறப்பு, நிகழ்வுகள் இவை அனைத்தும் ஒரு மகா சங்கல்பத்தின் பகுதிகள். “நான் செய்கிறேன்” என்ற அகந்தை மாயை. நாம் வெறும் கருவி மட்டுமே. நிகழ்வுகள் அனைத்தும் பரம்பொருளின் திட்டத்தி...