ஆன்மாவுக்கும் உறவுக்கும் இடையிலான உண்மை
ஆன்மாவுக்கும் உறவுக்கும் இடையிலான உண்மை
மனித வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளில் ஒன்று, ஆன்மாவுக்கு உறவு உண்டோ?
பிறப்பு, பாசம், உறவு, பிரிவுஇவை அனைத்தும் நம் வாழ்வின் அங்கங்களாகத் தோன்றினாலும், ஆன்மீக பார்வையில் அவை நிலையற்றவை.
உடல் என்பது ஆன்மா தங்கும் தற்காலிக இடம்.
உயிர் இருக்கும் வரைதான் உடலுக்குப் பெயர், புகழ், உறவு எல்லாம்.
உயிர் பிரிந்தவுடன் அந்த உடல் “பிணம்” அல்லது “சடலம்” என அழைக்கப்படுகிறது.
ஆன்மா ஒரு சட்டையை மாற்றுவது போல உடல்களை மாற்றிக் கொள்கிறது.
உறவுகள், பாசம், நட்பு அனைத்தின் அர்த்தமும் உயிர் உடலில் இருக்கின்ற வரையில் தான் நிலைக்கும்.
ஆன்மாவுக்கு தந்தை, தாய், மகன், பகைவர் என எதுவும் இல்லை.
அது தூய்மையான பேரொளி.
வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் வழிப்போக்கர்களைப் போல.
பயணம் முடியும் வரை துணை வருவார்கள், இலக்கு வந்ததும் பிரிந்து விடுவார்கள்.
பிறப்பு, இறப்பு, நிகழ்வுகள் இவை அனைத்தும் ஒரு மகா சங்கல்பத்தின் பகுதிகள்.
“நான் செய்கிறேன்” என்ற அகந்தை மாயை. நாம் வெறும் கருவி மட்டுமே.
நிகழ்வுகள் அனைத்தும் பரம்பொருளின் திட்டத்தில் நடைபெறுகின்றன.
உணர்ச்சிகள் அனைத்தும் உடலோடு முடிந்து விடுகின்றன.
பற்று, சொந்தம், சுயநலம் அனைத்தும் மாயைகளே.
ஆன்மா சுத்தமான ஒளி.அதற்கு பிணைப்பு இல்லை.
வாழ்க்கை நிலையற்றது.
இறுதியில் ஆறடி நிலம் கூட நமக்குச் சொந்தமில்லை.
ஆனால், உயிரோடு இருக்கும் வரை குடும்பக் கடமைகளைச் சளைக்காமல் செய்ய வேண்டும்.
அதில் “நான் செய்கிறேன்” என்ற சுயநலம் இருக்கக் கூடாது.
தன் நலம் கருதாத அர்ப்பணிப்பு மட்டுமே மனிதனை நிலையான பெயருடன் உலகில் வாழவைக்கும்.
இந்த உண்மையை உணர்ந்தால், வாழ்க்கையின் துயரங்களும் பிரிவுகளும் நம்மை ஆட்கொள்ளாது.
ஆன்மீக பார்வையில், நிலையற்றவற்றில் பற்றில்லாமல், நிரந்தரமான ஒளியை உணர்ந்து வாழ்வதே உண்மையான சாந்தி.
அன்பன்
சக்தி சக்திதாசன்
Comments
Post a Comment