தத்வமஸி
தத்வமஸி — நீயே அந்த பரம்பொருள் ஒரு சொல், ஒரு உலகம் அதுவே எமது சாத்திரம். “தத்வமஸி” என்பது சமஸ்கிருதத்தில் “That Thou Art” என்று மொழிபெயர்க்கப்படும் ஒரு வேதவாக்கியம். தமிழில் இதன் பொருள் — “நீயே அது” அல்லது “நீயே அந்த பரம்பொருள்”. இது உபநிஷத்துகளில் வரும் மிக முக்கியமான வாக்கியம். இது ஒரு மனிதனின் உண்மையான அடையாளம் என்ன என்பதைப் பற்றிய ஆழமான சிந்தனையைத் தூண்டுகிறது. அதாவது, நாம் நினைப்பது போல ஒரு தனிப்பட்ட உடல் அல்லது மனம் அல்ல நாம் அந்த பரம்பொருளின் ஒரு பகுதியே. அறிவியல் பார்வையில் அது தன்மை மற்றும் ஒற்றுமையைக் குறிக்கும். அறிவியல் கூறுவது என்ன? நாம் அனைவரும் அணுக்களால் ஆனவர்கள். அந்த அணுக்கள், பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களிலும் இருக்கின்றன. அதாவது, ஒரு மனிதனின் உடலும், ஒரு நட்சத்திரத்தின் தூளும், ஒரு மரத்தின் இலைக்கும் அடிப்படையில் ஒரே வகை அணுக்கள். இது அறிவியல் கூறும் “ஒற்றுமை”.எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை. ஆன்மீகம் என்ன சொல்கிறது? நீயும், நானும், இந்த உலகமும் எல்லாம் அந்த பரம்பொருளின் ...