பிரபஞ்சமும் நாமும் நம்பிக்கையின் ஆன்மீகப் பாதையின் ஒரு கோணம்.

பிரபஞ்சமும் நாமும்  நம்பிக்கையின் ஆன்மீகப் பாதையின் ஒரு கோணம்.

பிரபஞ்சம் சொன்னது இதுதான்,
“நம் ஆற்றல் ஈர்க்கும் சக்தியாக உள்ளது. சந்தேகத்திலிருந்து நிச்சயத்திற்குச் செல்லும் தருணத்தில், சக்திகள் நம் பக்கம் சுழலத் தொடங்கும்.”

இந்த வார்த்தைகள், மதங்களைக் கடந்த ஒரு ஆன்மீக உண்மையை எடுத்துரைக்கின்றன. 

நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எழும் நம்பிக்கை, பிரபஞ்சத்தின் அதிர்வலைகளை ஈர்க்கும் ஒரு மாயமான சக்தியாக செயல்படுகிறது. 

இது யோகா, வேதம், சாஸ்திரம், அல்லது அறிவியல் என எந்த வழியிலிருந்தாலும் உணரக்கூடியது.

நம்பிக்கையின் அதிர்வலை ஒரு ஆன்மீக வலயம்.

நாம் நம்பும் தருணத்தில், நம் சிந்தனைகள் தெளிவடைகின்றன.

"நான் இதைச் செய்யப்போகிறேன்” என்ற உறுதி, நம் உடம்பிலும், மனதிலும், சுற்றியுள்ள சூழலிலும் ஒரு புதிய அதிர்வலை உருவாக்குகிறது. 

இந்த அதிர்வலை, பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைவாக இணைந்து, நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்குகிறது.

அதே நேரத்தில், நாம் பயப்படும்போது, “இது நடக்காது” என்ற எண்ணம், எதிர்மறையான அதிர்வலைகளை உருவாக்குகிறது.

அது நம்மை மட்டுமல்ல, நம் எதிர்பார்ப்புகளையும் திசைதிருப்புகிறது. 

பிரபஞ்சம் எப்போதும் பதிலளிக்கிறது நாம் அனுப்பும் அதிர்வலைக்கு ஏற்ப.

எம் விருப்பங்கள் தார்மீகத் திசையை நோக்கி திரும்ப வேண்டும்.

நாம் விரும்பும் விஷயங்கள் தார்மீகமானவை, 

நியாயமானவை என்றால், அவை நம்மை நோக்கி நகரும். 

“நான் நல்லதைக் விரும்புகிறேன்” என்ற எண்ணம், பிரபஞ்சத்தின் ஒத்திசைவை ஈர்க்கும். 

இது ஒரு ஆன்மீகக் கோட்பாடு மட்டுமல்ல.

இது வாழ்க்கையின் நடைமுறை உண்மை.

நாம் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்தும் போது, நம் மனம் தெளிவடைகிறது. 

பயம் குறைகிறது.

 நம்பிக்கை பெருகுகிறது. 

இதுவே பிரபஞ்ச சக்தியை நம்முடன் இணைக்கும் முதல் படியாகும்.

நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை நம்பும் மனம் கொள்வது அவசியம்.

வாழ்க்கை என்பது ஒரு பயணம்.

  
இந்தப் பாதையில், நம்மால் கட்டுப்படுத்த முடியாத பல நிகழ்வுகள் நடக்கின்றன. 

ஆனால், நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்று நம் மனநிலை. 

“எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது” என்ற எண்ணம், நம்மை அமைதியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கிறது.

பிரபஞ்சம் நம்முக்காக அமைத்துள்ள பாதையில் நாம் நடக்க வேண்டும். 

நம்பிக்கையுடன், பயமின்றி, தெளிவாக. 

இது ஆன்மீக வாழ்வின் அடிப்படை.
  
இது எந்த மதத்தையும் மீறி, மனிதனின் உள்ளுணர்வை பேசும் ஒரு பொதுவான உண்மை.

நம்பிக்கை என்பது பிரபஞ்சத்துடன் பேசும் ஒரு மொழி. 

நாம் என்ன நினைக்கிறோம், என்ன நம்புகிறோம், அதற்கேற்ப பிரபஞ்சம் பதிலளிக்கிறது.
  
அச்சம் அல்ல, நம்பிக்கை. சந்தேகம் அல்ல, உறுதி. பயம் அல்ல, விருப்பம்.
  
இவைதான் நம் ஆன்மீகப் பயணத்தின் ஒளிக்குறிகள்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம்  எமக்காக பிரபஞ்சம் நியமிக்கும் பயணத்தை நம்புவது.

அன்பன்
சக்தி சக்திதாசன்

Comments