Posts

அஷ்டவக்கிர கீதையின் நான்காவது அத்தியாயம்.

Image
அஷ்டவக்கிர கீதையின் நான்காவது அத்தியாயம். முதல் சுலோகம் சமஸ்கிருத மூலம்: हन्तात्मज्ञस्य धीरस्य खेलतो भोगदुनुया । न हि संसारवाहीभिर् मूढैः सह समानता ॥ १ ॥ ஹந்தாத்மஜ்ஞானஸ்ய தீரஸ்ய கேலதோ போகதுனியா | ந ஹி ஸம்ஸாரவாஹீபிர் மூடை: ஸஹ ஸமானதா || ஞானம் பெற்ற ஒருவனின் மனநிலைக்கும், உலகியல் பிணைப்பில் உழலும் சாமானியனின் மனநிலைக்கும் இடையே உள்ள மலைக்கும் மடுவுக்கும் போன்ற இடைவெளியைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.  மேலே குறிப்பிட்ட முதல் ஸ்லோகம், ஒரு ஆத்ம ஞானியின் மேன்மையை வியந்து போற்றும் வகையில் அஷ்டவக்கிரரால் அருளப்பட்டது. ​அஷ்டவக்கிர கீதை என்பது அரசன் ஜனகனுக்கும் முனிவர் அஷ்டவக்கிரருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்.  ஆத்ம ஞானம் குறித்த விளக்கங்களைக் கேட்ட ஜனகன், தனக்கு ஏற்பட்ட பேரானந்தத்தை முந்தைய அத்தியாயத்தில் விவரித்தார்.  அதைக் கேட்ட அஷ்டவக்கிரர், "உண்மையிலேயே ஞானம் அடைந்த ஒருவன் இந்த உலகில் எப்படி இயங்குவான்?" என்பதை இந்த நான்காவது அத்தியாயத்தில் உறுதிப்படுத்துகிறார். ​இந்த ஸ்லோகத்தின் நேரடிப் பொருளாக, "தன் ஆன்மாவை அறிந்த தீரன் (ஞானி), இந்த உலகியல் இன்பங்களை ஒரு விளை...

ஆன்மாவுக்கும் உறவுக்கும் இடையிலான உண்மை

Image
ஆன்மாவுக்கும் உறவுக்கும் இடையிலான உண்மை மனித வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளில் ஒன்று, ஆன்மாவுக்கு உறவு உண்டோ?    பிறப்பு, பாசம், உறவு, பிரிவுஇவை அனைத்தும் நம் வாழ்வின் அங்கங்களாகத் தோன்றினாலும், ஆன்மீக பார்வையில் அவை நிலையற்றவை. உடல் என்பது ஆன்மா தங்கும் தற்காலிக இடம். உயிர் இருக்கும் வரைதான் உடலுக்குப் பெயர், புகழ், உறவு எல்லாம். உயிர் பிரிந்தவுடன் அந்த உடல் “பிணம்” அல்லது “சடலம்” என அழைக்கப்படுகிறது. ஆன்மா ஒரு சட்டையை மாற்றுவது போல உடல்களை மாற்றிக் கொள்கிறது. உறவுகள், பாசம், நட்பு அனைத்தின் அர்த்தமும்  உயிர் உடலில் இருக்கின்ற வரையில் தான் நிலைக்கும். ஆன்மாவுக்கு தந்தை, தாய், மகன், பகைவர் என எதுவும் இல்லை. அது தூய்மையான பேரொளி.    வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் வழிப்போக்கர்களைப் போல.    பயணம் முடியும் வரை துணை வருவார்கள், இலக்கு வந்ததும் பிரிந்து விடுவார்கள். பிறப்பு, இறப்பு, நிகழ்வுகள் இவை அனைத்தும் ஒரு மகா சங்கல்பத்தின் பகுதிகள். “நான் செய்கிறேன்” என்ற அகந்தை மாயை. நாம் வெறும் கருவி மட்டுமே. நிகழ்வுகள் அனைத்தும் பரம்பொருளின் திட்டத்தி...

திருவெம்பாவை .... ஒரு பார்வை

Image
திருவெம்பாவை திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் ஒரு பகுதியாகும். இது 20 பாடல்கள் கொண்டது, சிவபெருமானைத் துதிக்கும் பாவை மரபின் ஓர் அழகிய வடிவம். மாணிக்கவாசகர் அருளிய பாடல்கள் திருமுறை எட்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. இவை மார்கழி மாதத்தில் இளம்பெண்கள் அதிகாலையில் விளக்கேற்றி பாடும் பாவை நோன்பு மரபின் ஓர் அங்கம் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் என 20 நாட்கள் பாடி, பின்னர் திருப்பள்ளியெழுச்சி பாடல்களால் நிறைவு செய்யும் வழக்கம் உள்ளது. திருவெம்பாவை முதல் பாடல் (பாசுரம் 1) மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது, இதன் தொடக்கம்  "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்"  என்பதாகும்; இது, வாசகியர் (தோழிகள்) சிவபெருமானின் பெருமைகளைப் பாடிக்கொண்டிருக்க, உறங்கும் தோழியை எழுப்புவது, "ஆதியும் அந்தமும் இல்லாத அந்தப் பெரும் சோதியைப் பற்றி நாங்கள் பாடுவதைக் கேட்ட பிறகும் நீ உறங்குகிறாயோ? உன் காதுகள் செவிடாகிவிட்டனவா?" என்று கேள்வி கேட்பதோடு, சிவன் கழல்களை வாழ்த்தும் ஒலியைக் கேட்டு மற்றொர...

ஒரு பாசுரம் ! ஒரு பார்வை ! ஒரு பாடல் !

Image
அன்பானோர்களே ! இன்று மார்கழி முதல்நாள். ஒரு மாற்றமாக ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை இந்த சாமானியனின் சிற்றறிவுக்கு எட்டியவாறு பார்க்கும் ஒரு முயற்சி. திருப்பாவை: முதலாவது பாசுரம்  ​பாசுரம் ​மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர் மல்கும் ஆய்ப்பாடிக் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். ​மார்கழி நோன்பும் பொது வாழ்வும் எனும் பார்வையில் திருப்பாவையின் முதல் அடி ​திருப்பாவையின் முதலாவது பாசுரம், வெறும் நீராடல் அழைப்பாக இல்லாமல், ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனைக்கும், நம்முடைய சமுதாயப் பொறுப்புகளுக்கும் அடிகோலும் ஒரு மகத்தான தொடக்கமாகும்.      இது ஒரு ஆன்மீக எழுச்சி இயக்கத்திற்கான ஆண்டாளின் முதல் அழைப்பு. ​பரம்பொருளை அடைதலின் எளிமை. ​மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஆண்டாள் மார்கழி மாதத்தின் சிறப்பைப் பேசுகிறாள்.      மார்கழி என்பது ஆண்டின் மிகச் சிற...

அஷ்டவக்கிர கீதை மூன்றாவது சுலோகம்

Image
அஷ்டவக்கிர கீதை மூன்றாவது சுலோகம் ந ப்ருத்வீ ந ஜலம் நாக்நிர்ந வாயுர்த்யௌர்ந வா பவான் | ஏஷாம் ஸாக்ஷிணமாத்மானம் சித்ரூபம் வித்தி முக்தயே || 3 ||  தமிழ் மொழிபெயர்ப்பு "நீ பூமியல்ல, நீரல்ல, நெருப்பல்ல, காற்றல்ல, ஆகாயமுமல்ல. முக்திக்காக, உன்னை இவற்றையெல்லாம் கவனிக்கும்  சாட்சி யாகவும்,  அறிவுருவான (சித்ரூபம்)  ஆத்மாவாகவும் அறிந்துகொள்".  இந்த சுலோகம் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வழங்குகிறது: பஞ்சபூதங்கள் கடந்த நிலை:  மனிதர்கள் பொதுவாகத் தங்களை உடல் மற்றும் மனதுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், இந்த சுலோகம் நீங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து நிலைகளால் ஆனவர்கள் அல்ல என்று கூறுகிறது. சாட்சி பாவம்:  ஆன்மா என்பது இந்த உடல் மற்றும் உலக நிகழ்வுகளைக் கவனிக்கும் ஒரு  சாட்சி (Witness)  மட்டுமே. முக்திக்கான வழி:  ஒருவர் தன்னை இந்த பஞ்சபூதங்களில் இருந்து வேறுபடுத்தி, தான் ஒரு தூய அறிவு (Consciousness) என்று உணரும்போது முக்தி சாத்தியமாகிறது. ஆன்மீக விழிப்புணர்வு:  அறியாமையில் இருப்பவர்கள் தங்...

இருள் விழிப்புணர்வின் ஆன்மீகப் பயணம்

Image
இருள் விழிப்புணர்வின் ஆன்மீகப் பயணம் "இருள் விழிப்புணர்வு எப்போது  தொடங்குகிறது தெரியுமா ? நாம் நம் சிந்தனையை மதிப்பீடு செய்வதை நிறுத்தும்போது, நம் பாதையை ஏற்கும்போது, மற்றும் எம் இதயத்தின் வழியாக காதலை காணும்போது." இந்த வாசகம், ஆன்மீக வளர்ச்சியின் ஒரு ஆழமான அடையாளமாகும். இது நம்மை வெளிப்புற ஒளிக்கே அல்ல, உள்ளார்ந்த ஒளிக்கே அழைக்கிறது. "இருள்" என்பது இங்கு தீமையை குறிக்கவில்லை. அது அறியப்படாத, மறைக்கப்பட்ட, அல்லது மறுக்கப்பட்ட உண்மைகளை குறிக்கிறது. அந்த இருளுக்குள் நம்மை நாமே நேரில் நோக்கும்போது தான் உண்மையான விழிப்புணர்வு தொடங்குகிறது. சிந்தனையின் மதிப்பீடு ஒரு தடையாக அல்ல ஒரு வழியாகிறது. நாம் நம்மை மதிப்பீடு செய்வது, நம்மை வளர்ச்சியடையத் தடுக்கக்கூடிய ஒரு உளவியல் சுவர். "நான் போதுமானவன் அல்ல", "நான் தவறாக இருக்கிறேன்" போன்ற எண்ணங்கள், நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கின்றன. ஆன்மீக விழிப்புணர்வு, இந்த மதிப்பீடுகளை விட்டு விடும் துணிச்சலில்தான் பிறக்கிறது.    சிந்தனையை மதிப்பீடு செய்வதை நிறுத்தும்போது, நாம் நம்மை முழுமையாக ஏற்கத் தொடங்கு...

சிவலிங்கம்

Image
சிவலிங்கம்  மௌனமாக வழிகாட்டும் மோட்சத்தின் ஒளி சிவன் என்றால் மௌனம்.   மௌனம் என்றால் அமைதி.   அமைதி என்றால் ஆனந்தம்.   அந்த ஆனந்தத்தின் வடிவமே  சிவலிங்கம். “சிவம்” என்றால் என்ன? சிவம் என்பது வெறும் ஒரு கடவுள் பெயர் அல்ல.   அது மங்களம், அழிவில்லாத அமைதி, பற்றற்ற நிலை.   “லிங்கம்” என்றால் அடையாளம்.   அதாவது, மங்களத்தின் அடையாளம்  அதுவே சிவலிங்கம். மனிதன் பிறந்ததின் நோக்கம்தான் என்ன ? பணம், பதவி, புகழ்… இவை எல்லாம் நிலையானவை அல்ல.   மனத்தின் மாசுகளை கழுவி,   சுத்தமான சித்தத்துடன் சிவத்தை உணர்வதே வாழ்க்கையின் உண்மை நோக்கம். உபநிடதம் சொல்வது என்ன? “நான் உன்னை வணங்குகிறேன்” என்று சித்தத்தில் சிவனை வைத்துவிட்டால்,   தேவைகள் நம்மைத் தேடி வரும்.   அதனால்தான், சிவனுடன் இணைந்த அம்பிகை  சர்வமங்களாவாக காட்சியளிக்கிறார்.   மங்களம் எங்கிருந்தாலும், சிவன் அங்கே இருக்கிறார். இயற்கையின் மௌன வடிவமே சிவலிங்கத்துள் அடக்கம். கயிலாயத்தில் பனியாகத் தெரியும் சிவன்.   தாருகா ...